நான் அமெரிக்காவில் தொலைகாட்சியில் திரைப்படங்களைப் பார்க்கும் வழக்கம் உண்டு. ஆனால் சில நாட்களாக திகில் திரைப்படங்களாக வந்தன. அதிலே பூசணிக்காய் அடிக்கடி காண்பிக்கும் கட்சிகளும் வந்தன. என் மகனிடம் ஏன் இப்படிப்பட்ட திரைப்படங்களைப் போடுகிறார்கள் எனறு கேட்டேன். இந்த மாதம் பூராவும் இப்படித் தான் இருக்கும் எனறு பதில் வந்தது. திடீர் எனறு சில வீடுகளின் வாசல்களில் அச்சமூட்டும் வகையில் பொம்மைகள் வைக்கப்பட்டன. பேரங்காடிகளில் கருப்பு வண்ண அச்சமூட்டும் பொம்மைகள் விற்பனை ஆகிக் கொண்டிருந்தன. கேட்டதற்கு ஹல்லோவீன் நாள் வருகிறது அதனால் தான்
இப்படி வருகிறது எனறு சொன்னார்கள். நான் யோசித்துப் பார்த்தேன். எங்கள் சமுதாயத்தில் புரட்டாசி மதத்தை பூத மாதம் எனறு சொல்லுவார்கள். புரட்டாசி மாதத்தில் தான் மகாளய
அமாவாசை வருகிறது. மகாளய பட்சம் வருகிறது. புரட்டாசி மாதத்தில் தான் நம் சமுதாய மக்களில் பலர் கோவிந்தா லக்ஷம் கோவிந்தா எனறு சனிக்கிழமைகளில் வீடுகளில் பிச்சை கேட்டு இறைவனுக்கு படையல் படைக்கும் விசேஷம் நடக்கும். இங்கும் அதுபோல இந்த நாட்களில் அக்டோபர் 31 அன்று குழந்தைகள் பாத்திரம் ஏந்தி பிச்சை கேட்கும் நிகழ்ச்சி நடப்பதாகவும் கூறினார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. தகவலைத் திரட்ட விக்கிபீடியாவை நாடினேன். அதில் உள்ள தகவல்களில் சில பகுதியை அப்படியே தருகிறேன்.
Celtic Pagans consider the season a holy time of year.Celtic Reconstructionists, and others who maintain ancestral customs, make offerings to the gods and the ancestors.
ஆலோவீன் (Halloween ) என்பது அக்டோபர் 31 அன்று கொண்டாடப்படும் ஒரு விடுமுறைக் கொண்டாட்டம் ஆகும். ஆம். இங்கு இது ஒரு விடுமுறை நாளாக உள்ளது.அமெரிக்காவில் யுனிசெப் நிதி திரட்டும் திட்டம் இந்த கொண்டாட்டத்துடன் சேர்ந்து செயல்படுத்தப்படுகிறது. பிலடெல்பியாவின் புறநகர்ப் பகுதி ஒன்றில் 1950 ஆம் ஆண்டில் இவ்வழக்கம் அறிமுகமானது. பின்னர் அது 1952 ஆம் ஆண்டில் தேசிய அளவில் கடைப்பிடிக்கப்பட்டது. பள்ளிகள் தங்கள் மாணவர்களின் கைகளில் சிறு பரிசுப் பெட்டிகளை கொடுத்து வீடுகளுக்கு அனுப்புவார்கள். அவர்கள் வீடுகளில் இருந்து யுனிசெப்புக்கான ஆலோவீன் நிதியைப் பெற்றுத் திரும்புவர். இத்தகைய வகையில் இதுவரை 118 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான தொகையை மாணவர்கள் திரட்டியளித்துள்ளதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. படைப்பதாக கொண்டாடுகிறோம்.
இது செல்டிக் புது வருடம் என அறியப்படும்.[7]
இந்த உலகத்திற்கும் மறு உலகத்திற்குமான இடைவெளி இந்நாளில் மெலிந்து போவதாய் பழைய செல்ட் இனத்தவர் நம்பினர். அன்றைய நாளில் தங்களது முன்னோர்களின் ஆவிகளுக்கு அவர்கள் மரியாதை செய்வதோடு தீங்கிழைக்கும் பிற ஆவிகளை துரத்துவதையும் மேற்கொள்கின்றனர். நாமும் நமது முன்னோர்கள் இந்த மகாளய பட்சத்தில் வருவதாகக் கருதி வழிபடுகிறோம். மகாளய அமாவசை முன்னோர் வழிபாட்டுக்கு ஒரு முக்கிய தினமாக உள்ளது. நாமும் ஏறத்தாழ இந்த நேரத்தில் தான் நமது முன்னோர்களை வழிபடுகிறோம். முன்னோர் வழிபாடு என்பது உலகம் பூராவும் பரவி உள்ளதற்கு இது ஒரு அடையாளம். ஆனால் கிருத்துவ சமயவாதிகள் இந்த விழாவை எதிர்பதாகவும் இது பேகன் எனும் உருவ வழிபாடு செய்வோரின் வழக்கம் என்றும் அவர்கள் கூறுவதாகவும் அந்தக் கட்டுரை மூலம் தெரிகிறது. தீய ஆவிகளில் இருந்து தங்களைப் பாதுகாக்கும் அடையாளமாக தாங்களும் அது போன்ற முகமூடிகளையும் ஆடைகளையும் அந்நாளில் அணிந்து கொள்கின்றனர்.
இந்த கொண்டாட்டத்தில் ஒரு சிறிய தீயை எழுப்பி அவற்றுள் அகற்றப்பட வேண்டிய பொருட்கள் இடப்படுகின்றன. பல்வேறு வகையான ஆடைகளும் மூகமூடிகளும் கெட்ட ஆவிகள் செய்வதைப் போல கிழிக்கப்படுகின்றன.
சிறுவர் சிறுமியர் மாறுவேடமணிந்து வீடு வீடாகச் செல்வர். பரிசு தருகிறீர்களா அல்லது தந்திரம் செய்யட்டுமா என்று கேட்பர். வீட்டில் இருப்பவர்கள் மிட்டாய் அல்லது வேறு ஏதேனும் பணம் கொடுத்து அனுப்புவார்கள்.
நாமும் போகிப் பண்டிகையின் போது இப்படி செய்கிறோமே.
நாம் புரட்டாசியில் பிச்சை வாங்கி இறைவனுக்குப்
அடுத்த பதிவில் மீண்டும் தொடரலாம்.
No comments:
Post a Comment