பல்வேறு சமயங்களில் முன்னோர் வழிபாடு இருந்தாலும் அது செய்யப்படும் நாள் குறித்து
நமக்குத் தகவல்கள் சரியாகக்க் கிடைக்கவில்லை. ஆனால், நமது சமயங்களில் இந்த வழிபாட்டினை அமாவாசை தினம் அன்று செய்கிறோம். என் என்று யோசித்துப் பார்த்தேன். ஆம் சூரியன் என்பவர் நமது சாதகத்தைக் கணிக்கும் போது தந்தைக்கு காரகன் என்று சொல்கிறார்கள். சந்திரனை தாய்க்குக் காரகன் என்று சொல்கிறார்கள். சூரியனும் சந்திரனும் இணையும் தினமே அமாவாசை என்னும் தினம். எனவே தான் நாம் நமது முன்னோர்களை அப்படிப்பட்ட இன்றியமையாத தினத்தில் வழிபடுகிறோம். நமது பிறப்புக்கு அவர்கள் தானே காரணம்.
முழுநிலவு நாளை இறைவனின் வழிபாட்டுக்கும்
அமாவாசை நாளை முன்னோர் வழிபாட்டுக்கும்- தென்புலத்தாருக்கும் வைத்துள்ளார்கள்.
நான் இன்று ஒரு தளத்தில் படித்துக் கொண்டிருந்தபோது ஒரு சுவையான தகவல் கிடைத்தது. அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதில் வந்த வாசகத்தை அப்படியே உங்களுக்குத் தருகிறேன்.
IV. Karthru Krama (The order of eligibility for carrying out death ceremonies)
1. Chandrika
1000 holy periods of eclipses, 10000 vyathee padam or one lakh Amavasyas are not equivalent to one sixteenth of a dwadasi. Three half crores of such Dwadasi will not become equivalent to one sixteenth of the death day of parents. This means that the death anniversary of our parents is a very holy day. You have to do the rituals with devotion and interest on that day.
பல கோடி துவாதசி தினங்கள் ஒரு பித்ரு பூஜைக்கான தினத்திற்கு ஈடாகாது. அவ்வளவு இன்றியமையாத தினம் முன்னோர் வழிபாட்டுத் தினம். எனவே நாம் நமது முன்னோர்களை அவர்களுக்கு உரிய நாளில் வழிபாடு செய்து பயன் பெற வேண்டும். அந்த வழிபாட்டினை உவகையோடு - விருப்போடு - தூய பொருட்களை கொண்டு செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment