Friday, October 8, 2010

PITRU POOJA ON MAHAALAYA AMAAVASYA

பித்ரு பூஜையை நாம் ஏன் செய்ய வேண்டும் என்று என் நண்பர் என்னிடம் கேட்டு இருந்தார்.   நான் அவரை ஜெயஸ்ரீ சாரநாதன் அவர்களின் கட்டுரையையும் அதன் தொடர்பாக வந்த கேள்வி பதில்களையும் தமிழ் ஹிந்துவில் பார்த்து படிக்கும் படியும் முடிந்தால் குருஜி ஜெயஸ்ரீ சாரநாதன் அவர்களின் பதிவுகளை படித்துத் தெரிந்து கொள்ளும் படியும் கேட்டுக் கொண்டேன்.  இருந்தாலும் ஒருதடவை சுருக்கமாக நினைவு கூறவேண்டியது மகாளய அமாவாசையின் போது செய்ய வேண்டிய ஒரு கடமை.
பெற்றோர், பாட்டன்- பாட்டி,முப்பாட்டன்-பாட்டி என்று மூன்று தலைமுறைகளிலிருந்து முறையே, physical (Bhoo tattwa), vital (bhuvah tattwa), mental (swah tattwa) என்று
உடல் ரீதியானது,இரத்தம் போன்ற திரவ ரீதியானது,மனம் என்னும் அறிவு, மனநிலை ரீதியானது
என்றவாறு மூன்று நிலைகளில் பெறுகிறோம்.
மருத்துவ ஆராய்ச்சியிலும் இது தெரியவந்துள்ளது -
அதாவது physical - உருவம் சம்பந்தமான எலும்பு போன்றவற்றின் அமைப்பு பெற்றோரை ஒட்டி அமைகிறது.
இரத்தம், ஹார்மோன்கள் போன்றவை பாட்டன்மாரிடமிருந்து வருகிறது. உதாரணமாக, ஒருவருக்கு இரத்த அழுத்த நோய் வந்தால், அவரது பிள்ளைக்கு அந்த நோய் வரும் சாத்தியத்தை விட, பேரனுக்கு வரும் சாத்தியம் அதிகம்.
மனநிலை சம்பந்தப்பட்டவை, அறிவு கூர்மை முதலியன, முப்பாட்டன்மாரிடமிருந்து வருகின்றன.
அவர்களுக்கு பித்ரு காரியம் செய்யும்போது, இந்த மூன்று நிலைகளில் நாம் அவர்களிடமிருந்து பெற்றது, அவர்களைத் திரும்பி அடைகிறது.
அவர்கள் மறு பிறவி எடுத்திருந்தாலும், அவர்களை அடைகிறது. உதாரணமாக மறு பிறவி எடுத்த முப்பாட்டனுக்கு, நாம் தரும் தர்ப்பணம், அவரது, அப்போதைய மனோ நிலையில் ஒரு செறிவைக் கூட்டித் தருகிறது. ஒரு செயலை எப்படிச் செய்வது என்ற தவிப்பில் அவர் அப்பொழுது இருந்தால், சட்டென்று ஒரு idea உதயமாகி மனம் சரியாக வேலை செய்ய ஆரம்பிக்கும்.
எனவே முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கடனைத் தவறாமல் செய்யுங்கள்.   ஏதாவது கோவிலில் இறைவன் இந்த மாதிரி தனது பக்தனுக்காக செய்கிறாரா என்றும் அவர் கேட்டார்.  சரி முதலில் அவர் படிக்கும் முன் செய்திச் சுருக்கம் போல் தருவோம் என்று கூறினேன்.  திருவண்ணமலையில் அருணச்சலேஸ்வரரே இப்படி வள்ளலா மகாராஜாவுக்காக செய்வதாகக் கூறுவார்கள்.  மேலும் நான்   நடந்து கொண்டிருக்கும்.  இறைவனே பிதுர் காரியத்தை ஒரு கடனாகச் செய்யும் போது நாம் எம்மாத்திரம்?  மறவாமல் பித்ரு காரியங்களைச் செய்யுங்கள்.
 சொன்னா கட்டுரையில் வந்த தகவல். "செங்கல்பட்டுக்குப் பக்கத்தில் உள்ள நென்மேலி என்ற கிராமத்திலிருக்கும் பெருமாளும் தன் பக்தனுக்குப் பிண்டம் கொடுக்கிறார். இதைப் பற்றி திரு AMR அவர்கள் குமுதம் ஜோதிடத்தில் எழுதியிருந்தார்.இந்தக் கோயிலுக்குச் சென்று நானும் தரிசித்திருக்கிறேன்.

பக்தனுக்கு ஈமக் கிரியையும், வருடாந்திர திவசமும் செய்யும் பெருமாள், கும்பகோணம் சாரங்கபாணிப் பெருமாள் என்னும் ஆராவமுதன் ஆவார். நாராயண சுவாமி என்னும் தன பக்தனுக்கு இவ்வாறு செய்கிறார்.

இந்த பிண்டம் வைக்கும் பகவான் மாயாபூர் கோபிநாத்.
கோவிந்த கோஷரின்(சைதன்யா பிரபுவின் சிஷ்யர்) மகன் (மனைவியும்) இறந்துவிட்ட பின் - பகவான் கோபிநாத் கோஷரிடம் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்வார் அதாவது மகன் ஸ்தானத்தில் அவர் கோஷர்க்கு பிண்டம் வைப்பதாகவும், அதற்க்கு மாறாக தகப்பன் ஸ்தானத்தில் இருந்து கோஷர் நித்யம் பிரசாதம் செய்து தனக்கு கொடுக்க வேண்டும் என்பதே அந்த ஒப்பந்தம்

இப்படி நமக்குத் தெரியாமல் இன்னும் எவ்வளவோ இடங்களில்
மீண்டும் தொடர்வோம்.

No comments:

Post a Comment