Wednesday, October 20, 2010

MUNNORGAL KATHAI - MAHABARATHAM


ã¬Vô: RôjRô # Gu RôjRô ùL[WYoLÞdÏm TôiPYoLÞdÏm SPkR úTôûW TôWRl úTôo Fuß ùNôp¡\ôoLs?
 ùL[WYoLÞdÏ @kR úTo Gu YkRÕ?
TôiPYoLÞdÏ Gu @kRl úTo YkRÕ?
TôhP]ôo áP Gu TôiPYoLs úTôo ùNnVÔm?
IúW ÏZlTUô BÚdÏ RôjRô.  ¿eL ùNôpÛeL

RôjRô:  LûRûVd úLhPôp Buàm ÏZm×m.  BÚkRôÛm Sôu ùNôpú\u.  úLÞ.  ùTôÕYô BkRd LûRûVd úLhÏm úTôÕ TX ®`VeLs @£eLUôL BÚdÏm.  @R]ôp Rôu @kRd LôXj§p FlT¥ YôZ úYiÓm Fuß ùR¬kÕ ùLôs[ úYiÓm Fu\ôp BWôUôVQjûRl T¥.  FlT¥ FpXôm YôZd áPôÕ FuTûRj ùR¬kÕ ùLôs[ ULôTôWRjûRl T¥ Fuß ùNôpÛYôeL.  ׬ÙRô?
Sôu ®VôNo FݧV TôWRjûR ÑÚdLUôL LûRVôLl T¥jÕ Dsú[u.  A]ôp ®p-TôWRjûR T¥jÕ Dsú[u.  @Õ Rª¯p FÝRlThP @ÚûUVô] Lô®Vm.

ã¬Vô:  Gu RôjRô BkRd LûR FpXôm DiûUVô?

RôjRô: úPn AomvhWôe ¨X®p B\e¡]ôu Fuß ùNôp\ôeL.  ¿ Tôoj§Vô?  Vôo TôojRô?  ùNôu]ô úLhÓdÏú\ôªpúX.  @kR Uô§¬ Rôu ùNôu]ôd úLdLÔm.  SmU BXd¡Vj§úX TX BPeL°úX BkRl úTôûWl Tt± ùNn§ YÚÕ.  BkR LRôTôj§WeLû[l Tt± TX BPeL°p YÚ¡\Õ.

ã¬Vô:  @lT¥Vô Rªr BXd¡Vj§p TôWRm Tt± ùNn§ BÚd¡\Rô RôjRô?

RôjRô: AUômPô.  DRôWQjÕdÏf ùNôpXÔm]ô
ஈர்-ஐம்பதின்மரும் பொருது களத்து அவிய,
பேர் அமர்க் கடந்த கொடுஞ்சி நெடுந் தேர் 
ஆராச் செருவின் ஐவர் போல (415-417)
இளந்திரையன் பகை வென்றான் என்பது குறிக்கப்பட்டுள்ளது. விசயன் காண்டவ வனம் எரித்த செய்தியும், வீமன் வகுத்த மடைநூல் (பாக சாஸ்திரம்) நெறிப்படி பற்பல உணவு ஆக்கியமையும்,
கா எரியூட்டிய கவர் கணைத் தூணி  
பூ விரி கச்சைப் புகழோன் தன்முன்,   
பனிவரை மார்பன், பயந்த நுண் பொருட்   
பனுவலின் வழாஅப் பல் வேறு அடிசில் (238-241)
என வரும் சிறுபாணாற்றுப்படை அடிகளால் புலனாகின்றன.

கலித்தொகையில் உவமை வாயிலாகப் பாரதக் கதை நிகழ்ச்சிகள் பல காட்டப் பெற்றுள்ளன. அரக்கு இல்லில் ஐவரைக் குடிபுகச் செய்து துரியோதனன் அதற்குத் தீயிட்டது(25:1-4), அந்தப் பேராபத்திலிருந்து வீமன் தன் கிளைஞரைக்காப்பாற்றியது (25:5-8), துச்சாதனன் திரௌபதியின் கூந்தலைப் பற்றியது (101:18-20), அவனது நெஞ்சத்தை வீமன் பிளந்தது (101:18-20), துரியோதனன் துடையை வீமன் முறித்தது (52:2-3), பாரதப் பொருகளம்(104:57-59), முதலியவற்றைப் பற்றிய குறிப்புக்களைக் காணலாம். சிலப்பதிகாரத்தில், 'இலங்கையில் எழுந்த சமரமும், கடல்வணன் தேர் ஊர் செருவும், பாடி' (26:238-239) என இராமாயண பாரதப் போர்கள் இரண்டும் சுட்டப்பெற்றுள்ளன. அன்றியும், பாரதப் போர் பதினெட்டு நாள் நடந்தமை குறித்தும் (27:7-10), அப் போரில் சேரன் பெருஞ் சோறு அளித்தமை குறித்தும் (29:24), கண்ணன் பாண்டவர்க்குத் தூது நடந்தமை குறித்தும் (17:34,37) குறிப்புகள் வந்துள்ளன. விராடனது நகரில் விசயன் பேடியாக வாழ்ந்தமை பற்றி மணிமேகலையில் குறிப்பு உள்ளது (3:146-147).


பிற்காலச் சோழர் காலத்துத் தோன்றிய கலிங்கத்துப்பரணி,

தங்கள் பாரதம் முடிப்பளவும் நின்று தருமன்-
தன் கடற்படைதனக்கு உதவி செய்த அவனும் (194)

என்றும்,

தேவாசுர ராமாயண மாபாரதம் உளவென்று
ஓவா உரை ஓயும்படி உளது, அப் பொரு களமே (472)

என்றும், சோழரின் முன்னோன் ஒருவன் தருமன் பக்கம் நின்று உதவிய வகையையும,¢ பாரதப் போரையும் பற்றிக் கூறுதல் கவனிக்கத்தக்கது.
அரக்கரைப் பொருத முரட்போர் வில்லும்,   
பாரதம் பொருத பேர் இசைச் சிலையும்,     
தாருகற் கடிந்த வீரத்து அயிலும்
பாடிய புலவன் பதி அம்பர்ச் சேந்தன் 
என வரும் திவாகரத்தின் பத்தாவது ஒலிபற்றிய பெயர்த் தொகுதி இறுதிக் கட்டுரையால் திவாகர நிகண்டின் ஆசிரியர் பாரதம் பொருத விசயனது வெற்றி வில்லைப் பாடினார் என்பது தெரிகிறது. இவர் பாரதக் கதை முற்றும் பாடினரா' அல்லது அதன் பகுதிகளுள் ஏதேனும் ஒன்றைப் பாடினரா' என்பது துணியக்கூடவில்லை. சேந்தனாரின் புலமைக்கு எடுத்துக்காட்டாகக் கூறுவதனால் எல்லோரும் மதித்துப் போற்றிய ஓர் இலக்கியமாகவே இவருடைய நூல் இருந்திருக்கவேண்டும் என்று ஊகிக்கலாம். இங்ஙனமாக, சங்கநூல் தொடங்கிப் பாரதக் கதைப்பகுதிகள் தமிழ் நூல்களில் புலவர் பெருமக்களால் விதந்தோதப் பெற்றுள்ளமை மக்களிடையே இக்கதையின் பெரு வழக்கினையே புலப்படுத்தும்.

BlT¥ TX BXd¡Vl TôPpL°úX BkRf ùNn§ ®W®d ¡Pd¡\Õ.  @R]ôp Sôm Sm©j Rôu ALúYiÓm.  N¬Vô?

ãoVô:  N¬eL RôjRô

RôjRô:  ®p-TôWRm T¥jRôp TX SpX Rªr ùNôtLs SUdÏj ùR¬Ùm.  TX ÕûQd LûRLs ùR¬VYÚm.  DRôWQUôL Lô®VjûRj ÕYdÏm úTôúR AdÏRp, LôjRp, ÅdÏRp F] ØjùRô¯pLs Bû\Y]ôp SPjRlTÓYRôL Ds[Õ.  ÅdÏRp Sôm úLs®lTPôR IÚ ùNôp.

ஆக்கு மாறய னாமுத லாக்கிய வுலகம் காக்கு மாறுசெங் கண்ணிறை கருணையங் கடலாம் வீக்கு மாறர னாமவை வீந்தநாண் மீளப் பூக்கு மாமுத லெவனவன் பொன்னடி போற்றி.  
: வீக்கும் ஆறு - (காப்பாற்றப்பட்ட உயிர்களை) அழிக்குமாறு, அரன் ஆம் - சிவனாவனோ:
அவை வீந்த நாள் - அவைஅழிந்த காலத்தில், மீள பூக்கும் - மீண்டும் படைக்கின்ற, மா முதல் (ஆம்)- சிறப்புற்றமுதற்கடவுள்

B§-ÚkÕ ÅdÏRp Fu\ôp @¯jRp Fuß SUdÏl ×XlTÓ¡\Õ.  Á[l édÏm Fu\ôp ÁiÓm TûPjRp Fuß ®[eÏ¡\Õ.  UôØRp Fu\ôp ØRtLPÜs Fuß ùR¬V YÚ¡\Õ.  BlT¥  Sôm @±VôR TX ùNôtLû[ Sôm @±kÕ ùLôs[ Yônl× Ds[Õ.

ãoVô:  AUôm RôjRô.  ùRôûXdLôh£ûVl TôojRôp RªúZ U\kÕÓm úTôX BÚdÏ.  @§úX Rªe¡ÄÑ Rôu úTÑ\ôeL.  Umªe¡\ôeL.  Pô¥e¡\ôeL.  @e¡s Fuà ùNôp\ôeL.  FûRf ùNôpXÔm]ôÛm Ae¡Xj§úX Rôu ùNôp\ôeL.  A]ô úTÚ UhÓm Rªr ùRôûXd Lôh£ Fuß ùNôp-d¡\ôeL.
BûRl TôojÕ¡húP BÚkúRôm]ô SôU TX Rªr YôojûRLû[j ùRôûXjÕ ®ÓúYôm úTôX BÚdÏ RôjRô.  Sôu Buàm TX Rªr YôojûRLû[Ùm LûRLû[Ùm úLhLÔm.  ¿eL ùNôp-d ùLôÓeL.

RôjRô: N¬Pô.  LûR §ÚlTôtLPûXd LPkR LûR«p BÚkÕ ÕYeÏÕ.  §ÚlTôtLPûXd LûPkR úTôÕ @§-ÚkÕ @ØRm UhÓUpX §ÚULs úRôu±]ôs.  §ÚULu # AUôm Nk§Wu Fuàm ¨XYu úRôu±]ôu. Buàm FiQt\ SpX SpX ùTôÚhLs TôtLPûXd LûPkR úTôÕ ¡ûPjR].

ãoVô:  @lT¥u]ô XhѪ NôªdÏ Nk§Wu NúLôRW]ô RôjRô?

RôjRô: AUômPô §ÚUL°u Rm© Rôu BkR Nk§Wu.  BYu RhNàûPV ùTiL°p 27 úTûWj §ÚUQm ùNnÕ ùLôs¡\ôu.

ãoVô: Fu]eL RôjRô? IiÔ úTôRôRô?  BlT¥ 27 úTûWj §ÚUQm ùNnÕ ùLôiÓs[ôú]? BYu ®[eÏYô]ô?

RôjRô: D]dÏ ®[eÏÕ.  @YàdÏ ®[eLpúX.  @R]ôp Rôu @Yu @¯kÕ úTôÏmT¥ UôU]ô¬Pm NôTm ùTt\ôu.  ©\Ï £Y²u @Ú[ôp úRnkÕ Y[Úm YpXûUûVl ùTt\ôu.  @Ru ©u]o §]Øm IÚ Uû]®«Pm Y£d¡\ôu.  @Yu VôÚPu Y£d¡\ôú]ô @Õ Rôu @uû\V ShNj§Wm.  SmU NôRLl×jRLj§p 27 ShNj§Wm BÚdÏm.  @Õ éWô Nk§WàûPV Uû]®«u ùTVoLs Rôu.  SôhLôh¥ûVl TôojRôp Buß Fu] ShNj§Wm Fuß úTôh¥ÚdÏm.  @kR ShNj§WjÕPu @Yu Buß ÏÓmTm SPjÕ¡\ôu Fuß ùTôÚs.  ShNj§WjûR RôWûL Fuß ùNôpYôoLs.

ãoVô: N¬eL RôjRô.  Sôm TôWRd LûRdÏ YÚúYôm.

Tuesday, October 19, 2010

PITHRUPOOJA - IN TEMPLES

பித்ரு பூஜை என்று அழைக்கப்படுகிற முன்னோர் வழிபாடு  சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள குருங்காலீஸ்வரர் மற்றும் பெருமாள் கோவில்களில் 2000 ஆண்டில் நான் சென்னை சென்று இருந்தபோது நடந்து கொண்டிருந்தது.  அறிவிப்பு பலகையில் அறிவிப்பு கூட நான் பார்த்தேன்.  ஆனால் பின்னர் அந்த பூஜை சில நிர்வாக காரணங்களுக்காக நிறுத்தப்பட்டு விட்டது என்று தெரிந்து கொண்டேன்.  அந்த பூஜை வேறு தெய்வத் தளங்களில் செய்யப்படுகிறதா என்று தேடிக் கொண்டிருந்த போது கேரளா மாநிலத்தில் ஒரு கோவிலில் உள்ளது குறித்து ஆங்கிலத்தில் ஒரு கட்டுரையைப் பார்த்தேன். தளத்தின் பெயர் http://hindulegacy.blogspot.com/2010/10/thirunelli-pithru-temple.
திருநெல்லி என்ற ஊரில் பித்ரு பூஜை சிறப்பாக நடப்பதாக அறிந்தேன்.
ராமச்சந்தர் என்பவர் ஒரு அருமையான பதிவினை கொடுத்து இருந்தார். வயநாடு மாவட்டத்தில் மனந்தவாடி என்ற நகரில் இருந்து 32 KM தொலைவில்   இந்த கோவில் இருப்பதாகத் தகவல் கொடுத்து உள்ளார்.  இது கோழிக்கோடு புகைவண்டி நிலையத்தில் இருந்து 72 KM  தொலைவில் உள்ள தலம். பிரம்மகிரி என்னும் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்த கோவில் உள்ளது.  நடைபயணத்தில் இருந்த பக்தர்கள் பசியாற இறைவனை வேண்டியபோது ஒரு நெல்லி மரம் தோன்றியதாகவும் அதன் பலன்களைப் புசித்து அவர்கள் பசியாரினார்கள் என்றும் திருத்தல வரலாறு உரைக்கிறது.  கோவிலுக்கு சிறுது தொலைவில் பாப நாசினி என்னும் ஆறு உள்ளது.  முன்னோர்களுக்கு இங்கு வழிபாடு நடத்தினால் மிகச் சிறப்பு என்றும் அமாவாசைகளில் இங்கு பலர் வந்து வழிபாடு நிகழ்த்துவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  கயையில் செய்யப்படும் முன்னோர் வழிபாட்டுக்குச் சமமானது என்று கூறுகிறார்கள்.  வழியில் ஒரு குகையில் சிவன் கோவில் ஒன்று இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  முடிந்தால் போய் வாருங்கள். 
 
கடந்த வாரம் மகாளய அமாவாசையின் போது ஒரு பதிவினை கீழ்க்கண்ட வலைத் தளத்தில் படித்தேன்.
அதில் முன்னோர் வழிபாட்டினைப் பற்றி கேட்டு அறிந்து பிறருக்குச் சொல்வதே ஒரு நல்ல விடயம் என்று கூறப்பட்டு இருந்தது. "In fact , circulating , sharing information on Oblations is also one of service or Tarpan to our Pitars, forefathers !"  மகாளய பட்சத்தின் போது ஒவ்வொரு நாளும் முன்னோருக்காக செய்யப்படும் வழிபத்தின் பலனும் கொடுக்கப்பட்டு இருந்தது. முதல் நாள் பொருள், இரண்டாம் நாள் செல்வம், மூன்றாம் நாள் பெருமை, நான்காம் நாள் வியாபார விருத்தி,  நான்காம் நாள் எதிரிகளை வெல்லல், ஐந்தாம் நாள் அனைத்து பேறுகளும், ஆறாம் நாள் புகழ், ஏழாம் நாள் இறைப் பலம், இப்படி வரிசைப்படுத்தப்பட்டு உள்ளது.  அதை அப்படியே உங்களுக்குத் தருகிறேன்.
Viritually speaking there are two reasons for all of our mundane problems. One caused by the planets, the other by departed spirits. 1st Moon Bestow WEALTH  -
2nd Moon Bestow progeny
3rd Moon Bestow Business prosperity
4th Moon Overpowering enemies
5th Moon Bestow All prosperity
6th Moon Bestow Fame
7th Moon Bestows divine strength
8th Moon Bestow Intelligence
9th Moon Gains from women
10th Moon Bestow Success in undertakings
11th Moon Prosperity of children and intelligence to children
12th Moon More progeny and gains through education
12th Moon More progeny and gains through education
13th Moon Blessed with many vehicles and renders Peace and longevity
14th Moon Mahalaya New Moon – Those who are not able to do Tarpan on all the above phases of the Moon, should definitely offer tarpan on this day in order to accrue the above said benefits and also will receive benefits by doing Tarpan for those who died due to weapons or accidents. During this day the known and unknown souls that have departed during the last 30 years are treated equal to God
We should constantly take care of them in order to have a peaceful life. Once a year there is a great celebration in the Pitra loka for 2 weeks. It is called Mahalaya fortnight. It starts on September 27th (this year), right after the full moon and ends on the Mahalaya new moon day, October 10th. This two-week period is the most important period to appreciate your departed ancestors.

எனவே முன்னோர்வழிபாட்டினை மறவாது செய்யுங்கள்.  இறை வழிபாட்டினைப் போன்றதே இந்த வழிபாடும்.
 

Sunday, October 17, 2010

INRU VETRITH THIRUNAAL - SAKTHIK KADAVULAITH THOZHUVOM

ஒன்பது நாள் இரவுத் திருவிழா முடிந்து வெற்றித் திருநாள் வந்து விட்டது.   கோவில்களில் கூட்டம் அலைமோதியது.   இறைவியை அழகு படுத்தி அலங்காரவல்லியாக மக்கள் கண்டு களித்தனர்.   இந்த ஒன்பது நாளும் நான் பாரதியாரின் தோத்திரதைச் சொன்னேன்.   உள்ளம் எங்கிலும் புத்துணர்ச்சி பொங்கியது.இதோ அந்த தோத்திரம்.
எடுத்த காரியம் யாவினும் வெற்றி,
எங்கு நோக்கினும் வெற்றி
மற்று ஆங்கே
விடுத்த வாய்மொழிக்கு எங்கணும் வெற்றி
வேண்டினேனுக்கு அருளினள் காளி,
தடுத்து நிற்பது தெய்வதமேனும்
சாரு மானுடவாயினும் அதைப்
படுத்து மாய்ப்பள் அருட்பெருங் காளி,
பாரில் வெற்றி எனக்குறுமாறே
என்னும் எண்ணங்கள் யாவினும் வெற்றி,
எங்கும் வெற்றி எதனினும் வெற்றி,
கண்ணும்   ஆருயிரும் என நின்றாள்
காளித்தாய் இங்கு  எனக்கருள் செய்தாள்,
மண்ணும் காற்றும் புனலும் அனலும்
வானும் வந்து வணங்கி நில்லாவோ?
விண்ணு ளோர்  பணிந்து  ஏவல் செய்யாரோ?
வெல்க காளி பதங்கள் என்பார்க்கே.
-
மகாகவி பாரதி

இந்த இறைவியைத் தான் எப்படி எல்லாம் கவிஞர்கள் போற்றுகிறார்கள் - அதையும் இன்று பார்ப்போமே. புராணங்களில் இறைவியின் திரு அவதாரமும்,  பெருமைகளும்  கூறப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக, அன்னை பராசக்தியின் ஆயிரம் திருநாமங்களைக் கூறும் லலிதா ஆயிரம் திருநாமம் என்னும் தோத்திரம் உள்ளது. அயக்ரீவர் என்ற மகரிஷி (திருமாலின் திருஅவதாரமாகக் கூறப் படுவதும் உண்டு) பொதிகையில் வாழ்ந்த தமிழ் முனிவர் என்று போற்றப்படுகிற அகத்திய முனிவருக்கு உபதேசம் செய்வதாக 183 பாடல்கள் அடங்கிய இந்த நூல் அமைக்கப் பட்டுள்ளது. அகத்தியரும், அவரது மனைவி உலோபாமுத்திரையும் சக்தி வழிபாட்டு நெறிகளை உருவாக்கிய குருமார்களில் முதன்மையாக வைத்துப் போற்றப் படுபவர்கள் (உ லோபாமுத்திரையால் போற்றப் பட்டவள் என்றே ஒரு நாமம் லலிதா ஆயிரம்திருநாமத்தில் உண்டு).  இதிலே வரும் சில போற்றிகளை நாம் இன்று பார்ப்போம்.
 அறிவாகிய அக்னி குண்டத்தில் தோன்றியவளே போற்றி
 ஆசை வடிவான பாசக்கயிற்றை ஏந்தியவளே போற்றி
தீமையைப் பொசுக்கும் கோப வடிவான அங்குசத்தை கையில் ஏந்தி ஒளிர்பவளே போற்றி
 மனமாகிய கரும்புவில்லை உடையவளே போற்றி 
ஐந்து புலன்களாலும் உணரப்படும் ஒலி, தொடுகை, உருவம், ரசம், மணம் என்ற ஐந்து தன்மாத்திரைகளையும், ஐந்து மலர்க்கணைகளகாக் கொண்டவளே போற்றி
பாசக்கயிற்றால் உயிர்களை ஆசையில் பிணிப்பவளே போற்றி
 பின்  அங்குசத்தால் பாசத்தை- ஆசையை  வெட்டி எறிபவளே போற்றி.
 நீண்ட கண்களையுடையவளே போற்றி
 சிவப்பொளி வெள்ளத்தில் அண்டங்கள் அனைத்தையும் மூழ்கச் செய்பவளே போற்றி
 கால் நகங்களின் ஒளியால் வணங்குவோர் அகத்திலுள்ள இருட்குணங்களை அகற்றுபவளே போற்றி
 அவள் பாதகமலத்தின் தூசியே வேத மங்கையின் வகிட்டில் விளங்கும் குங்குமம்
 அனைத்து ஆகமங்களாகிய சிப்பிகளுக்கும் உள்ளிருக்கும் நன்முத்தே போற்றி 
 கண்களை இமைத்து மூடுவதால் புவனங்களை ஆக்கி அழிப்பவளே போற்றி
கலியின் களங்கங்களை நாசம் செய்பவளே போற்றி
 ஆசையற்றவளே போற்றி
ஆசையைப் போக்குபவளே போற்றி
மோகமற்றவளே போற்றி
மோகத்தை நாசம் செய்பவளே போற்றி
பாவமற்றவளே போற்றி
பாவத்தை நாசம் செய்பவளே போற்றி
வேற்றுமையில்லாதவளே போற்றி
வேற்றுமையைப் போக்குபவளே போற்றி போற்றி
காமனுக்கு உயிரூட்டிய மருந்தே போற்றி
நினைத்த வடிவத்தைத் தகுபவளே போற்றி
உயிர்களிடத்தில் உணர்வாக இருப்பவளே போற்றி 
அன்பே வடிவானவளே போற்றி
அன்பைப் பொழிபவளே போற்றி
 விலங்கியல்பில் வாழ்வோருக்கு பயங்கரமானவளே போற்றி
 கலைகளின் இருப்பிடமானவளே போற்றி
 கலைகளை மாலையாகத் தரித்தவளே போற்றி 
 வீராங்கனையே போற்றி
 வீரர்களின்  அன்னையே போற்றி
 என்றும் வெல்லும் சேனைகளை உடையவளே போற்றி
ஞான ஆனந்த ஒளியே போற்றி
படைப்பைச் செய்பவளே  போற்றி
 பிரம்மன் வடிவானவளே போற்றி
காப்பவளே போற்றி
கோவிந்தன் வடிவானவளே போற்றி 
அழிப்பவளே போற்றி
 மறைப்பவளே போற்றி

 இப்படி ஆயிரம் திருநாமங்களிலே பல கதைகள் போற்றிகள் உண்டு.  இப்படிப் போற்றி வளர்ந்த காரணத்தாலேயே அழைத்தால் வருவாள் என்ற உறுதியுடன் அபிராமி மீது திருக்கடையூரில் பக்தர் ஒருவர் அபிராமி அந்தாதியைப் பாடுகிறார்.  உரிமையுடன் அழைக்கிறார். 
 ஒன்றாய் அரும்பிப் பலவாய் விரிந்து இவ் உலகு எங்குமாய்
நின்றாள்
அனைத்தையும் நீங்கி நிற்பாள்
என்றன் நெஞ்சின் உள்ளே
பொன்றாது நின்று
புரிகின்றவாறு இப்பொருள் அறிவார்
அன்று ஆல் இலையில் துயின்ற பெம்மானும் என் ஐயனுமே.
என்று நமக்கு எடுத்துக் கூறுகிறார்.   அவர் பாடிய பாடலைக் கேட்டு சந்திரனை உதிக்கச் செய்தாள் இறைவி. 
பாரதியாரோ தான் புரிந்து கொண்ட இறைவியை நம் மனக்கண் முன் நிறுத்தும் போது
யாதுமாகி நின்றாய் காளி!
யாதிலும் நீ நிறைந்தாய்.
இயற்கையென் றுனையுரைப்பார்
சிலர் இணங்கும் ஐம்பூதங்க ளென்று இசைப்பார்
செயற்கையின் சக்தி யென்பார்
ஆதிப் பரம்பொருளின் ஊக்கம்
 அதை அன்னையெனப் பணிதல் ஆக்கம்
மூலப் பழம்பொருளின் நாட்டம்
 இந்த மூன்று புவியும் அதன் ஆட்டம்.
துன்பமிலாத நிலையே சக்தி
தூக்கமிலாக் கண் விழிப்பே சக்தி
அன்பு கனிந்த கனிவே சக்தி
ஆண்மை நிறைந்த நிறைவே சக்தி
இன்ப முதிர்ந்த முதிர்வே சக்தி
எண்ணத்திருக்கு மெரியே சக்தி
முன்பு நிற்கின்ற தொழிலே சக்தி
முக்தி நிலையின் முடிவே சக்தி

என்றெல்லாம் நமக்கு விளக்குவார். இப்படி நமக்கு எல்லாமாக உள்ளவள் அந்த இறைவி.  அவளுக்கு ஆயிரம் திருநாமங்கள்.  அவளைத் துதிப்பதால் அவள் நமக்கு என்ன தருவாள்.  இது பாமரனின் கேள்வி.  அபிராமி அந்தாதியை நமக்கு அருளியவர் கூறுவார்:
தனம் தரும், கல்வி தரும்,
ஒருநாளும் தளர்வு அறியா மனம் தரும்,
தெய்வ வடிவும் தரும்,
நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும்,
நல்லன எல்லாம் தரும்.
 இப்படி நல்லனவற்றை எல்லாம் தந்து தீமையை அளிக்கும் அந்த சக்தியை - இறைவியை நாம் போற்றித் துதிக்கும் திருநாளே இந்த வெற்றி விழா.  துதியுங்கள் - பலனடயுங்கள்.
  

Tuesday, October 12, 2010

BIRTH - DEATH - WHAT IS OUR DUTY INBETWEEN?

நாம் நமது பிறப்பையோ, இறப்பையோ மிகவும் பொருட்படுத்தாது, நாம் வாழும் இயல்பு நிலையை ஆராய்ந்து பார்க்கக் கற்றுக் கொள்ள வேண்டும். எது எதற்கோ நாம் நேரம், காலம் என்று செலவழிக்கிறோம், ஆனால் இதைப் புரிந்து கொள்ள முயற்சி செய்வதற்கு மிகவும் யோசிப்போம். மதுரையில் வாழும் நாம் என்றாவது இரமணர் வசித்த இல்லத்தைப் பார்த்திருக்கோமா?   அந்த இல்லம் எங்கு உள்ளது என்றாவது நமக்குத் தெரியுமா?  ஆம்  அந்த இல்லம் அங்கயற்கண்ணி ஆலயத்தின் எதிர்புறம் உள்ள தெருவில் உள்ளது.   சிறு சிறு நகைக்கடைகளுக்கு நடுவில் ஒரு சிறிய பிள்ளையார் கோவில் இருக்கும்.  அதற்கு எதிரில் உள்ள இல்லத்தைநோக்குங்கள்.   அங்கு பெயர்ப் பலகை இருக்கும்.   உள்ளே செல்லுங்கள்.   கண் மூடி துதித்துப் பாருங்கள்.  உங்கள் அனுபவம் வித்தியாசமாக இருக்கும்.  அந்த இல்லத்தின் மாடி அறையில் தான் இரமண மகரிஷிக்கு அந்த மரண அனுபவம் தோன்றி ஞான நிலையை நோக்கிச் செல்லும் எண்ணம் உதித்து உள்ளது.
நமது பிறப்பு மற்றும் மரணம் பற்றி அந்த பெருமகனார்  என்ன  சொல்கிறார் என்று பார்க்கலாமா?
மரண பயம் மிக்க உள அம்மக்கள் அரணாக
மரணபவம் இல்லா மகேசன் - சரணமே
சார்வார் தம் சார்வோடு தாம் சாவுற்றார் சாவு எண்ணம்
சார்வரோ சாவாதவர்

“உள்ளது நாற்பது” என்ற அவர் நூலில் வரும் பாடல் இது.
“நான் இறந்து விட்டேன், இந்த உடலை இப்போது எடுத்துக் கொண்டு போய் மயானத்தில் எரித்து விடுவார்கள்; ஆனால் நான் இன்னும் இதோ இருக்கிறேனே? ஆக நான் இந்த உடல் இல்லை”
என்ற தன் சத்து-சித்து-ஆனந்த நிலையை சிறு வயதிலேயே உணர்ந்த அனுபவத்தின் பேரில் எழுதப்பட்டது என்றே நாம் கொள்ளலாம். இச்செய்யுள் நமக்கு என்ன சொல்கிறது?
மரண பயம் மிகத் தீவிரமாக உள்ள நல்ல குணமுடைய மனிதர்கள், பிறப்பு இறப்பு என்ற இரண்டும் இல்லாத ஒரு பாதுகாப்புள்ள கோட்டையாக விளங்கும் இறைவனின் கால்களைப் பிடித்து இறைஞ்சி  அடைக்கலம் அடைவார்கள். தனது பந்த பாசங்கள், பற்றுக்கள் இவைகளோடு அடைக்கலம் அடைந்தவர்கள் தம்முடைய ஜீவ பாவமும் அறவே ஒழிந்தவர் ஆவார்கள். அப்படிச் சாவாத தன்மையடைந்த ஜீவன் முக்தர்கள் மறுபடியும் மரணத்தைப் பற்றிய எண்ணத்தை அடைவார்களோ?
சாதாரணமாக ஒருவனின் வைராக்கியத்தைச் சொல்லும்போது பிரசவ வைராக்கியம், மயான வைராக்கியம் என்று இரண்டைச் சொல்வார்கள். ஒன்று பிறப்பையும், மற்றது இறப்பையும் பற்றியது. இது இரண்டுக்கும் இடையில் தானே வாழ்க்கை அமைகிறது. அதனால் இவ்விரண்டையும் சொல்லி விட்டால் எல்லாம் சொன்னது போல என்று பெரியோர்கள் நினைத்திருக்க வேண்டும்.
ஒருவன் தன் மனைவிக்குக் குழந்தை பிறக்கும் போது படும் கஷ்டத்தை நினைத்துக்கொண்டோ, அல்லது ஒரு பெண்ணே தனது நிலையை நினைத்து அவதிப்படும்போதோ, இன்னுமொரு குழந்தை வேண்டாமே என்று நினைப்பதுதான் பிரசவ வைராக்கியம்.  இது நமது நாட்டில் பெண்களுக்கு உறுதியாக ஏற்படக் கூடிய ஒன்று.   அமெரிக்கத் திருநாட்டில் பிரசவத்தின் போது கணவனும் உடன் இருக்க வேண்டும் என்று மருத்துவர் கூறுகிறார்.   மனைவி அல்லல் படுவதை அந்த நாட்டில் கணவன் காண முடிகிறது.   அதனால் பிரசவ வைராக்கியம் ஆண்களுக்கும் அந்த நாட்டில் கிடைக்க வாய்ப்பு உள்ளது.   சிற்றின்பத்தின் காரணமாக மனைவி படும் துன்பத்தை நேரில் பார்ப்பதால் குழந்தையின் பேரில் அந்த தந்தைக்கு அதிக ஈடுபாடு வருகிறது.   குழந்தையின் மழலையில் அது காலப் போக்கில் கரைந்து போகலாம்.
அதுபோலவே ஒருவன் தனது உற்றாரோ, சுற்றமோ இறந்து போகும்போது, மயானத்தில் இட்டு விட்டு வரும் போது நமக்கும் ஒருநாள் இப்படித்தானே நடக்கும், இனி அனைவருடனும் மிக அன்பாகவும், கருணையுடனும் இருக்க வேண்டும் என்று நினைப்பது மயான வைராக்கியம்.   பணம் - புகழ் எதுவும் உடன் வராது என்பது விளங்கும்.  அப்படியானால் இறுதி வரை எது வரும்?    நான் யார்? அழியும் இந்த உடலா?  அழியாத உயிரா?   ஏன் இந்தப் பிறவி?  மற்ற உயிரினங்களையும் இறைவன் படித்து உள்ளானே?   ஓர் அறிவு முதல் ஐந்து அறிவு வரை உள்ள உயிரனமாக தான் பிறக்காது பகுத்து அறியும் ஆறாவது அறிவுடன் பிறந்தது ஏன் என்ற கேள்வி பிறக்கும்.  இதுவும் பின்னாளில் ஓரளவாவது கரையக் கூடும்.  சிலர் தொடர்ந்து நான் யார் நான் யார் என்ற கேள்வியைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.
ஆனாலும் ஒருவரை நல் வழியில் கொண்டு வருவதற்கு, மரண பயத்தைப் போன்றதொரு சாதனம் வேறு கிடையாது. ஞானம் பெறுவதற்கும், நாம் உலகில் நல்லதையே நினைத்து, நல்லதையே பேசி, நல்லதையே செய்வதற்கும் அது ஒரு பயனுள்ள சாதனம் தான்.இரமணருக்கு ஞானம் அப்படித்தான் வந்தது. மற்றவர்கள் நல்ல வழியில் செல்வதற்காவது அதை உபயோகப்படுத்திக் கொண்டால் அவர்களுக்கு நன்மையே.
அப்படி வரும் மரண பயத்தைப் பற்றி சிறிதேனும் யோசித்தவர்கள் நன்கு தெளிவு அடைவார்கள். ஏனெனில், மரணம் என்பதை யாரும் தவிர்க்க முடியாது. ஒன்று சொல்வார்களே? வாழ்க்கையில் நிச்சயமானது என்று ஒன்று உண்டென்றால் அது மரணம்தான் என்று. இதை விட உண்மையான வாக்கியம் வேறு ஒன்று உண்டோ? தவிர்க்க முடியாது என்பதை நினைவில் கொண்டு மேலும் அதை அலசினால், அப்படிப்பட்ட மனிதர்களில் பலர் முதலில் செய்வதென்ன?
இறைவனைத் துதிப்பார்கள். ஏன்? மரணம் என்பது அவர்களைப் பொறுத்தவரை ஒரு முடிவினைக் குறிக்கிறது. அதனால் முடிவே இல்லாத இறைவனைத் துதித்து முடிவுள்ள தமக்கு ஒரு பாதுகாப்பினைத் தேடுகிறார்கள். அப்படித் தேடுபவர்கள், முடிவில்லாத இறைவனிடம் அடைக்கலம் அடைகிறார்கள் என்றுதான் பொருள். அந்தச் சரணாகதி ஒரு முழுச் சரணாகதி என்றால் இறைவனை நாடுபவர்களும் இறைவனைப் போலவே முடிவற்றவர்களாக ஆவதால், அவர்களுக்குச் சாவு என்று ஏதும் உண்டோ என்று கேட்கிறார் இரமணர். அதற்குப் பின்னும் அவர்களுக்கு மரண  பயம் வருமென்றால், அவர்களது சரணாகதி முற்றான  சரணாகதி இல்லை என்பதைத் தவிர வேறென்ன சொல்வது?
அப்படியென்றால் அவர்கள் தங்கள் சரணாகதியை முற்றாக்கும்  முயற்சியில்தான் ஈடுபட வேண்டும். எவ்வளவோ முயன்றுதான் பார்க்கிறேன், முடியவில்லையே என்று பலர் சொல்வார்கள். சிலர் இப்படித்தான் எனக்கு இருக்கும் போலிருக்கிறது, என்று தம் வினையை நொந்து கொள்வார்கள். அதற்கு இரமணர் என்ன சொல்வார் என்று பார்க்கலாம்.
வினை முதல் நாம் ஆயின் வினைப் பயன் துய்ப்போம்
வினை முதல் ஆரென்று வினவித் - தனை அறிய
கர்த்தத்துவம் போய்க் கருமம் மூன்றும் கழலும்
நித்தமாம் முக்தி நிலை 

 செய்யப்படும் செயல்களின்  கர்த்தா நாமே என்று எண்ணினால், அந்தக் கர்மங்களினால் விளையக்கூடிய பயனையும் நாமே அனுபவிப்போம். இந்தக் செயல்களைச்  செய்யும் கர்த்தாவாகிய நான் யார் என்று விசாரித்து தனது உண்மை நிலையை  அறிந்தால், செயல்களைச்  செய்யும் கர்த்தா நான் அன்னும் அகம்பாவம்  நீங்கும்.   நான் என்ற நினைப்பு - எண்ணம் நம் மனதிலிருந்து அகல வேண்டும்.  அத்துடன் சஞ்சிதம், ஆகாமியம், பிராப்தம் என்ற மூன்று கர்மங்களும் அழிந்துவிடும்.   முன்வினை அழியும்.  இப்பிறப்பில் உள்ள வினை அகலும்.   இரட்டைகளிருந்து - நல்லது, கெட்டது - என்று பகுத்துப் பார்க்காமல் எல்லாம் இறைவன் நமக்குத் தந்த அனுபவம் என்று ஏற்றுக் கொள்ள வேண்டும்.  இன்பங்கள் வரும் போது நாம் இறைவனை நினைப்பது இல்லை.  துன்பம் வரும் போது மட்டும் துன்பத்தின் காரணத்தைத் தெரிந்து கொள்ள ஜோதிடம் பார்க்கிறோம்.  என் நல்லது நடந்தது என்று யாராவது ஜோதிடம் பார்கிரோமா? கிடையாது.   எல்லாம் இறைவன் செயல் என்று ஏற்றுக்கொள்ளும் பற்றற்ற நிலை நோக்கி சிறிது சிறுதாக நாம் பழக வேண்டும்.  இந்த நிலையே நித்தியமாகிய முக்தி நிலை.
இது “நான்” எனும் கணவன் இறந்துவிட்டால் அவனது மூன்று மனைவிகளும் கைம்மை அடைவதைப்போல, கர்த்தா நான் இல்லை என்றால் கர்மம் மூன்றும் நம்மை ஒட்டாது. இது  முன்பே இரமணர் சொன்ன கருத்துதான். ஆனாலும் இதில் ஒரு சிறப்பு என்ன என்றால், அப்படி அவர் முன்பு சொன்னது ஞானிகள் விஷயத்தில். இப்போது அவர் சொல்வதோ எவர் விஷயத்திற்கும் பொருந்தும். இதுதான் இரமணர் போன்ற ஞானிகளுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம். அவர்கள் கண்ணில் ஞானி என்றோ, அஞ்ஞானி என்றோ எந்தப் பாகுபாடும் கிடையாது. “நான்” எனும் தன்முனைப்பாகிய அகந்தையை  அழித்துவிட்டு ஒருவன் இருக்கிறான், இன்னொருவன் அதை அழிக்க முடியாது இருக்கிறான். அதைத் தவிர வேறு வித்தியாசம் ஏதும் இல்லை.
ஆக நம்மைப் பொறுத்தவரை நாம் ஞானி ஆவதற்கு ஒரு எளிதான வழி சொல்லியிருக்கிறார். அதாவது, நாம் செய்யும் செயல் எதுவானாலும் “அது அவன் செயல்” என்று உளமார நினைத்து அவனுக்காகவே செய்ய வேண்டும். அது போதும். இதுவேதான் முற்றான  சரணாகதி என்று சொல்லப்படுவது அல்லவா? அதில் சிறிது தவறி நாம் செய்கிறோம் என்றோ, அவனா செய்கிறான் என்றோ சிறிதாவது சந்தேகம் அடைந்தாலோ, நாம் நமது வினையைக் கூட்டிக் கொள்கிறோம் என்றே ஆகும். அப்போது அதன் பலனையும் நாமே எதிர்கொள்ள வேண்டும் - இப்பிறவியிலோ அல்லது எப்பிறவியிலோ. அப்படி என்றால் பிறந்தவன் எவன் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?
பிறந்தது எவன் தன் பிரம்ம மூலத்தே
பிறந்தது எவண் நான் என்று பேணிப் - பிறந்தான்
அவனே பிறந்தான் அவன் நிதம் முனீசன்
அவன் நவன் நவன் தினமும் நாடு

எவனொருவன் தான் பிறந்தது எங்கே என்று விசாரித்து, தனது இருப்பிடமாகிய பிரம்ம மூலத்தில் பிறந்தானோ (மூலத்தை அடைந்தானோ) அவனே பிறந்தவன் ஆவான். அப்படிப் பிறந்த அவன் நித்தியமான முனீசன் ஆவான். அவன் எப்போதும் புதுமையோடு விளங்குவான் என்று அறியவேண்டும்.
நான் உடல் இல்லை - மனம் இல்லை -புத்தி இல்லை  …. என்று இவ்வாறான நிலைகள் எல்லாவற்றையும் கடந்து எவன் தனது “என்றும் உள்ள”  வடிவத்தை உணர்ந்து அதிலேயே நிலைத்து நின்று, சகல உயிரினங்களையும்  அவ்வாறே காண்கிறானோ, அவனே பிறப்பு - இறப்பு எனும் நிலைகளைக் கடந்த சிறப்பை அடைந்தவன். அதுவரை அவன் மீண்டும் மீண்டும் வந்து இறுதியில் இந்த நிலையையே அடைகிறான். “அடைகிறான்” என்பதைவிட “என்றும் இப்படியே உள்ளோம்; ஆனாலும் அதை உணராது இருந்தோம்” என்பதைத் தெரிந்து கொள்கிறான். இதுவே பேரறிவு எனப்படுகிறது. எதைத் தெரிந்து கொண்டால் மேலும் தெரிவதற்கு ஏதுமில்லையோ அதைவிட சிறப்பு ஏதும் உண்டோ?
அந்தச் சிறப்பை அடைபவர்கள் எந்த வழி அவர்களுக்கு இயல்பாக இருக்கிறதோ அதன் மூலம் அடையலாம், வேறு வழிகள் வாயிலாய் வந்து சேர்ந்தாலும் மற்ற வழிகளின் தாக்கங்களையும் அவர்கள் அப்போது உணரலாம். ரமணர் உறுதியாகக் கூறுகிறார்:
ஆதலினால் அறிவு மயமாம் சுத்த
இதயத்தே அகத்தைச் சேர்க்கும்
சாதனையால் வாதனைகளொடு வாயு
ஒடுக்கமுமே சாருந் தானே

 அறிவு சொரூபமான தூய சச்சிதானந்த இதயத்தில் மனதை அதனிடம் சேர்க்கும் பயிற்சியினால் வாசனைகளின் அழிவும், பிராண வாயுவின் ஒடுக்கமும் தானாகவே அடையக்கூடும்.
ஒருவன் தனது இயல்பான வழிகளில் செல்லும் மனத்தைக் கட்டுப் படுத்தியோ, பிராண வாயுவை அடக்கிச் செய்யும் பயிற்சிகள் மூலமோ, இறைவனிடம் பக்தி செலுத்தியோ, தம் தம் கடமைகளைச் செவ்வனே ஆற்றியோ, வேறு எந்த வழிகளிலோ சென்று தனது ஆன்ம நிலையை எய்தலாம். ஆன்ம நிலையை எய்தியவன் மேலே சொன்ன அனைத்தும் தமக்குப் பொருந்துகிறது என்றும் பின்னர் உணரலாம். காரணத்தினால் காரியத்தையும், காரியத்தினால் காரணத்தையும் முன்னும் பின்னுமாக இருவரும் உணர்வார்கள்.
நான் இதைச் செய்து அதை அடைந்தேன் என்று இங்கு கூற வாய்ப்பில்லை. நான் என்னை விசாரித்துத் தன்னை உணர்ந்தேன், ஆனாலும் அன்றும் இன்றும் எப்போதும் அப்படியே உள்ளேன் என்று சொல்லாமல் சொல்லி, நினையாமல் நினைப்பதே இங்கு உள்ள சிறப்பு.
சரி நேரம் கிடைத்தால் மதுரையில் உள்ள அன்பர்கள் அவர் வசித்த இல்லத்திற்குச் சென்று வாருங்கள்.   அவர் பிறந்த இடம் கூட மதுரைக்கு அருகில் உள்ளது.  காரியாபட்டியில் இருந்தும் அருப்புக்கோட்டையில் இருந்தும் பேருந்து வசதி உள்ளது.  திருச்சுழி என்பது அந்த ஊரின் பெயர்.  ஒரு பெரிய சிவன் கோவிலும் உள்ளது.  பாண்டிய நாட்டுத் தலங்களிலே ஒன்று இந்த தலம்.

Sunday, October 10, 2010

PITRU POOJA ON AMAVAASYA - WHY - WHAT IS THE REASON?

பல்வேறு சமயங்களில் முன்னோர் வழிபாடு இருந்தாலும் அது செய்யப்படும் நாள் குறித்து
நமக்குத் தகவல்கள் சரியாகக்க் கிடைக்கவில்லை.  ஆனால், நமது சமயங்களில் இந்த வழிபாட்டினை அமாவாசை தினம் அன்று செய்கிறோம்.  என் என்று யோசித்துப் பார்த்தேன்.  ஆம்  சூரியன் என்பவர் நமது சாதகத்தைக் கணிக்கும் போது தந்தைக்கு காரகன் என்று சொல்கிறார்கள்.  சந்திரனை தாய்க்குக் காரகன் என்று சொல்கிறார்கள்.  சூரியனும் சந்திரனும் இணையும் தினமே அமாவாசை என்னும் தினம்.  எனவே தான் நாம் நமது முன்னோர்களை அப்படிப்பட்ட இன்றியமையாத தினத்தில் வழிபடுகிறோம்.  நமது பிறப்புக்கு அவர்கள் தானே காரணம்.
முழுநிலவு நாளை இறைவனின் வழிபாட்டுக்கும்
அமாவாசை நாளை முன்னோர் வழிபாட்டுக்கும்- தென்புலத்தாருக்கும்   வைத்துள்ளார்கள்.
நான் இன்று ஒரு தளத்தில் படித்துக் கொண்டிருந்தபோது ஒரு சுவையான தகவல் கிடைத்தது.  அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.  அதில் வந்த வாசகத்தை அப்படியே உங்களுக்குத் தருகிறேன்.
IV. Karthru Krama (The order of eligibility for carrying out death ceremonies)
1. Chandrika
1000 holy periods of eclipses, 10000 vyathee padam or one lakh Amavasyas are not equivalent to one sixteenth of a dwadasi. Three half crores of such Dwadasi will not become equivalent to one sixteenth of the death day of parents. This means that the death anniversary of our parents is a very holy day. You have to do the rituals with devotion and interest on that day.

பல கோடி துவாதசி தினங்கள் ஒரு பித்ரு பூஜைக்கான தினத்திற்கு ஈடாகாது.  அவ்வளவு இன்றியமையாத தினம் முன்னோர் வழிபாட்டுத் தினம்.  எனவே நாம் நமது முன்னோர்களை அவர்களுக்கு உரிய நாளில் வழிபாடு செய்து பயன் பெற வேண்டும்.  அந்த வழிபாட்டினை உவகையோடு - விருப்போடு - தூய பொருட்களை கொண்டு செய்ய வேண்டும்.

Friday, October 8, 2010

PITRU POOJA ON MAHAALAYA AMAAVASYA

பித்ரு பூஜையை நாம் ஏன் செய்ய வேண்டும் என்று என் நண்பர் என்னிடம் கேட்டு இருந்தார்.   நான் அவரை ஜெயஸ்ரீ சாரநாதன் அவர்களின் கட்டுரையையும் அதன் தொடர்பாக வந்த கேள்வி பதில்களையும் தமிழ் ஹிந்துவில் பார்த்து படிக்கும் படியும் முடிந்தால் குருஜி ஜெயஸ்ரீ சாரநாதன் அவர்களின் பதிவுகளை படித்துத் தெரிந்து கொள்ளும் படியும் கேட்டுக் கொண்டேன்.  இருந்தாலும் ஒருதடவை சுருக்கமாக நினைவு கூறவேண்டியது மகாளய அமாவாசையின் போது செய்ய வேண்டிய ஒரு கடமை.
பெற்றோர், பாட்டன்- பாட்டி,முப்பாட்டன்-பாட்டி என்று மூன்று தலைமுறைகளிலிருந்து முறையே, physical (Bhoo tattwa), vital (bhuvah tattwa), mental (swah tattwa) என்று
உடல் ரீதியானது,இரத்தம் போன்ற திரவ ரீதியானது,மனம் என்னும் அறிவு, மனநிலை ரீதியானது
என்றவாறு மூன்று நிலைகளில் பெறுகிறோம்.
மருத்துவ ஆராய்ச்சியிலும் இது தெரியவந்துள்ளது -
அதாவது physical - உருவம் சம்பந்தமான எலும்பு போன்றவற்றின் அமைப்பு பெற்றோரை ஒட்டி அமைகிறது.
இரத்தம், ஹார்மோன்கள் போன்றவை பாட்டன்மாரிடமிருந்து வருகிறது. உதாரணமாக, ஒருவருக்கு இரத்த அழுத்த நோய் வந்தால், அவரது பிள்ளைக்கு அந்த நோய் வரும் சாத்தியத்தை விட, பேரனுக்கு வரும் சாத்தியம் அதிகம்.
மனநிலை சம்பந்தப்பட்டவை, அறிவு கூர்மை முதலியன, முப்பாட்டன்மாரிடமிருந்து வருகின்றன.
அவர்களுக்கு பித்ரு காரியம் செய்யும்போது, இந்த மூன்று நிலைகளில் நாம் அவர்களிடமிருந்து பெற்றது, அவர்களைத் திரும்பி அடைகிறது.
அவர்கள் மறு பிறவி எடுத்திருந்தாலும், அவர்களை அடைகிறது. உதாரணமாக மறு பிறவி எடுத்த முப்பாட்டனுக்கு, நாம் தரும் தர்ப்பணம், அவரது, அப்போதைய மனோ நிலையில் ஒரு செறிவைக் கூட்டித் தருகிறது. ஒரு செயலை எப்படிச் செய்வது என்ற தவிப்பில் அவர் அப்பொழுது இருந்தால், சட்டென்று ஒரு idea உதயமாகி மனம் சரியாக வேலை செய்ய ஆரம்பிக்கும்.
எனவே முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கடனைத் தவறாமல் செய்யுங்கள்.   ஏதாவது கோவிலில் இறைவன் இந்த மாதிரி தனது பக்தனுக்காக செய்கிறாரா என்றும் அவர் கேட்டார்.  சரி முதலில் அவர் படிக்கும் முன் செய்திச் சுருக்கம் போல் தருவோம் என்று கூறினேன்.  திருவண்ணமலையில் அருணச்சலேஸ்வரரே இப்படி வள்ளலா மகாராஜாவுக்காக செய்வதாகக் கூறுவார்கள்.  மேலும் நான்   நடந்து கொண்டிருக்கும்.  இறைவனே பிதுர் காரியத்தை ஒரு கடனாகச் செய்யும் போது நாம் எம்மாத்திரம்?  மறவாமல் பித்ரு காரியங்களைச் செய்யுங்கள்.
 சொன்னா கட்டுரையில் வந்த தகவல். "செங்கல்பட்டுக்குப் பக்கத்தில் உள்ள நென்மேலி என்ற கிராமத்திலிருக்கும் பெருமாளும் தன் பக்தனுக்குப் பிண்டம் கொடுக்கிறார். இதைப் பற்றி திரு AMR அவர்கள் குமுதம் ஜோதிடத்தில் எழுதியிருந்தார்.இந்தக் கோயிலுக்குச் சென்று நானும் தரிசித்திருக்கிறேன்.

பக்தனுக்கு ஈமக் கிரியையும், வருடாந்திர திவசமும் செய்யும் பெருமாள், கும்பகோணம் சாரங்கபாணிப் பெருமாள் என்னும் ஆராவமுதன் ஆவார். நாராயண சுவாமி என்னும் தன பக்தனுக்கு இவ்வாறு செய்கிறார்.

இந்த பிண்டம் வைக்கும் பகவான் மாயாபூர் கோபிநாத்.
கோவிந்த கோஷரின்(சைதன்யா பிரபுவின் சிஷ்யர்) மகன் (மனைவியும்) இறந்துவிட்ட பின் - பகவான் கோபிநாத் கோஷரிடம் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்வார் அதாவது மகன் ஸ்தானத்தில் அவர் கோஷர்க்கு பிண்டம் வைப்பதாகவும், அதற்க்கு மாறாக தகப்பன் ஸ்தானத்தில் இருந்து கோஷர் நித்யம் பிரசாதம் செய்து தனக்கு கொடுக்க வேண்டும் என்பதே அந்த ஒப்பந்தம்

இப்படி நமக்குத் தெரியாமல் இன்னும் எவ்வளவோ இடங்களில்
மீண்டும் தொடர்வோம்.

Monday, October 4, 2010

Halloween day - whether it is related to pithru pooja?

நான் அமெரிக்காவில் தொலைகாட்சியில் திரைப்படங்களைப் பார்க்கும் வழக்கம் உண்டு.  ஆனால் சில நாட்களாக திகில் திரைப்படங்களாக வந்தன.  அதிலே பூசணிக்காய் அடிக்கடி காண்பிக்கும் கட்சிகளும் வந்தன.  என் மகனிடம் ஏன் இப்படிப்பட்ட திரைப்படங்களைப் போடுகிறார்கள் எனறு கேட்டேன்.   இந்த மாதம் பூராவும் இப்படித் தான் இருக்கும் எனறு பதில் வந்தது.  திடீர் எனறு சில வீடுகளின் வாசல்களில் அச்சமூட்டும் வகையில் பொம்மைகள் வைக்கப்பட்டன.  பேரங்காடிகளில் கருப்பு வண்ண அச்சமூட்டும் பொம்மைகள் விற்பனை ஆகிக் கொண்டிருந்தன.  கேட்டதற்கு ஹல்லோவீன் நாள் வருகிறது அதனால் தான்
இப்படி வருகிறது எனறு சொன்னார்கள்.  நான் யோசித்துப் பார்த்தேன்.  எங்கள் சமுதாயத்தில் புரட்டாசி மதத்தை பூத மாதம் எனறு சொல்லுவார்கள்.  புரட்டாசி மாதத்தில் தான் மகாளய
அமாவாசை வருகிறது.  மகாளய பட்சம் வருகிறது.  புரட்டாசி மாதத்தில் தான் நம் சமுதாய மக்களில் பலர் கோவிந்தா லக்ஷம் கோவிந்தா எனறு சனிக்கிழமைகளில் வீடுகளில் பிச்சை கேட்டு இறைவனுக்கு படையல் படைக்கும் விசேஷம் நடக்கும்.  இங்கும் அதுபோல இந்த   நாட்களில் அக்டோபர் 31 அன்று குழந்தைகள் பாத்திரம் ஏந்தி பிச்சை கேட்கும் நிகழ்ச்சி  நடப்பதாகவும் கூறினார்.  எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  தகவலைத் திரட்ட விக்கிபீடியாவை  நாடினேன். அதில் உள்ள தகவல்களில் சில பகுதியை அப்படியே தருகிறேன்.
Celtic Pagans consider the season a holy time of year.Celtic Reconstructionists, and others who maintain ancestral customs, make offerings to the gods and the ancestors.
ஆலோவீன் (Halloween ) என்பது அக்டோபர் 31 அன்று கொண்டாடப்படும் ஒரு விடுமுறைக் கொண்டாட்டம் ஆகும்.   ஆம்.  இங்கு இது ஒரு விடுமுறை நாளாக உள்ளது.அமெரிக்காவில் யுனிசெப் நிதி திரட்டும் திட்டம் இந்த கொண்டாட்டத்துடன் சேர்ந்து செயல்படுத்தப்படுகிறது. பிலடெல்பியாவின் புறநகர்ப் பகுதி ஒன்றில் 1950 ஆம் ஆண்டில் இவ்வழக்கம் அறிமுகமானது. பின்னர் அது 1952 ஆம் ஆண்டில் தேசிய அளவில் கடைப்பிடிக்கப்பட்டது. பள்ளிகள் தங்கள் மாணவர்களின் கைகளில் சிறு பரிசுப் பெட்டிகளை கொடுத்து வீடுகளுக்கு அனுப்புவார்கள். அவர்கள் வீடுகளில் இருந்து யுனிசெப்புக்கான ஆலோவீன் நிதியைப் பெற்றுத் திரும்புவர். இத்தகைய வகையில் இதுவரை 118 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான தொகையை மாணவர்கள் திரட்டியளித்துள்ளதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது.  படைப்பதாக கொண்டாடுகிறோம்.
இது செல்டிக் புது வருடம் என அறியப்படும்.[7]
இந்த உலகத்திற்கும் மறு உலகத்திற்குமான இடைவெளி இந்நாளில் மெலிந்து போவதாய் பழைய செல்ட் இனத்தவர் நம்பினர். அன்றைய நாளில் தங்களது முன்னோர்களின் ஆவிகளுக்கு அவர்கள் மரியாதை செய்வதோடு தீங்கிழைக்கும் பிற ஆவிகளை துரத்துவதையும் மேற்கொள்கின்றனர்.   நாமும் நமது முன்னோர்கள் இந்த மகாளய பட்சத்தில் வருவதாகக் கருதி வழிபடுகிறோம்.  மகாளய அமாவசை முன்னோர் வழிபாட்டுக்கு ஒரு முக்கிய தினமாக உள்ளது.  நாமும் ஏறத்தாழ இந்த நேரத்தில் தான் நமது முன்னோர்களை வழிபடுகிறோம்.  முன்னோர் வழிபாடு என்பது உலகம் பூராவும் பரவி உள்ளதற்கு இது ஒரு அடையாளம்.  ஆனால் கிருத்துவ சமயவாதிகள் இந்த விழாவை எதிர்பதாகவும் இது பேகன் எனும் உருவ வழிபாடு செய்வோரின் வழக்கம் என்றும் அவர்கள் கூறுவதாகவும் அந்தக் கட்டுரை மூலம் தெரிகிறது.  தீய ஆவிகளில் இருந்து தங்களைப் பாதுகாக்கும் அடையாளமாக தாங்களும் அது போன்ற முகமூடிகளையும் ஆடைகளையும் அந்நாளில் அணிந்து கொள்கின்றனர்.
இந்த கொண்டாட்டத்தில் ஒரு சிறிய தீயை எழுப்பி அவற்றுள் அகற்றப்பட வேண்டிய பொருட்கள் இடப்படுகின்றன. பல்வேறு வகையான ஆடைகளும் மூகமூடிகளும் கெட்ட ஆவிகள் செய்வதைப் போல கிழிக்கப்படுகின்றன. 
 சிறுவர் சிறுமியர் மாறுவேடமணிந்து வீடு வீடாகச் செல்வர். பரிசு தருகிறீர்களா அல்லது தந்திரம் செய்யட்டுமா என்று கேட்பர். வீட்டில் இருப்பவர்கள் மிட்டாய் அல்லது வேறு ஏதேனும் பணம் கொடுத்து அனுப்புவார்கள்.
நாமும் போகிப் பண்டிகையின் போது இப்படி  செய்கிறோமே. 
நாம் புரட்டாசியில் பிச்சை வாங்கி இறைவனுக்குப்
அடுத்த பதிவில் மீண்டும் தொடரலாம்.