Friday, September 24, 2010

MUNNOR VZHIPAADU - PITHRU POOJA MUTHALIL SEYTHATHU YAAR

முதன் முதலில் இந்த முன்னோர் வழிபாட்டை செய்தவர் ஈசன் தான்.  வராக அவதாரம் எடுத்து பூமியை காப்பாற்றி வெளியே கொண்டு வரும் போது நடைபெற்ற சம்பவம் என்று சொல்லப்படுகிறது.  இது மகாபாரதத்தில் வருகிற ஒரு கதை தானாம்.  நான் படித்ததை அப்படியே தருகிறேன்.  குழந்தைகளே நீங்களும் அதிகமாகப் படிக்க வேண்டும்.  இப்போது நமக்கு உள்ள வசதி இணையதளங்கள்.  எராளமாக உள்ளன.  நானும் அப்படி தமிழ் ஹிந்து தளத்தில் சுற்றியபோது கிடைத்த தகவல் தான் இது.  அதிலே ஜெயஸ்ரீ சாரநாதன் என்று ஒருவர் கட்டுரை எழுதி இருந்தார்.  அந்தக் கட்டுரையின் பின்னூட்டத்தில் தான் எவ்வளவு விபரங்கள்.  நீங்கள் எல்லாம் படிப்பதில்லை.  அதனாலே தான் நான் புரிந்து கொண்ட வரை உங்களுக்கு சொல்கிறேன்.  சரியா?  "தாத்தா நாங்களும் இனி படிப்போம் தாத்தா" உறுதி அளித்தார்கள் குழந்தைகள்.  சரி கதைக்கு வருவோம். படியுங்கள்.
தெய்வமே முதல் பித்ரு காரியம் செய்தவர் என்று மகாபாரதம் (சாந்தி பர்வம்- 355 அத்தியாயம்) கூறுகிறது. நர-நாராயணர், நாரதருக்குச் சொல்வதாக இது வருகிறது.
வராஹ அவதாரத்தில் பூமியைக் கடலிலிருந்து வெளியே கொண்டுவந்த போது, மத்தியானம் வந்து விட்டது. மத்யாநிஹம் செய்ய வேண்டி வராகர் ஆயத்தம் செய்த போது, தெற்றுப் பல்லில் கொஞ்சம் மண் ஒட்டிக் கொண்டிருந்ததைப் பார்த்தார். தலையை ஆட்டி அவர் உதறின போது அவை மூன்று உருண்டைகளாக பூமிக்குத் தென்புறத்தில் போய் விழுந்தன. அவையே மூன்று தலைமுறை பித்ருக்களாக ஆகினர். அவர்களுக்கு வராகர் பிண்டம் வைத்து பித்ரு காரியம் செய்தார். பித்ரு காரியத்தை ஸ்தாபித்தவரும் அவர்தான். அதை நடத்தி உலகுக்கு வழி காட்டியரும் அவர்தான்.
சரீரம் இல்லாதவர்களுக்குப் பிண்டம் தர வேண்டும் என்றும், பித்ருக்களுக்குத் தருவது தன்னையே அடைகிறது என்றும் (அவரே இயற்கை, எல்லாம் அவரிடமே சென்று சேர்க்கிறது) இன்ன பிற நலன்களையும் வராகர் எடுத்துரைத்தார்.

அதனாலே தான் - அதாவது பூமா தேவியை வராகர் பாதுகாப்பாக கொண்டு வந்ததால் நாம் பூமியில் வசிப்பவர்கள் வராகரின் செயலை தொடர்ந்து செய்கிறோம்.  சரியா?  "தாத்தா முன்னோர்களை வேறு சமயங்களில் நாம் கொண்டாடுகிறோமா? "  என்றான் அர்ஜுன்.  சரியான கேள்வி.   திருமண நிகழ்சிகள் நடக்கும் போது நாந்தி என்று ஒரு நிகழ்ச்சி வரும்.  அதில் நாம் நமது முன்னோர்களை அழைத்து மரியாதை கொடுக்கிறோம்.  சில பகுதிகளில் முதலில் உணவு ஊட்டும் போது இப்படி மரியாதை செய்கிறார்கள்.   தாத்தா ஒரே சாமிக்கு எவ்வளவு பேர் வச்சிருக்காங்க ஏன் தாத்தா.  டேய் காது ஒண்ணு தான்.  பொத்தாம் பொதுவா சொல்றோம்.  ஆனா ஆங்கிலத்திலே OXYGEN, NITROGEN, HYDROGEN, CARBONDIOXIDE  என்று எவ்வளவு பேர் சொல்லி சொல்றாங்க.  அந்த மாதிரி தான் ஒவ்வொரு வேளை செய்த போது இறைவனுக்கு ஒவ்வொரு பேர்.  இந்த வராகர் கதையைத் தான் பாரேன்.
பூமி எங்கிலும் நீர் நிறைந்திருந்த போது, நிலப் பகுதிகளை வெளியே கொண்டு வந்த அந்த இறை சக்தி, வராஹம் எனப்பட்டது.குகை போன்ற பூமிக்குள் நுழைந்து, அதை வெளியே கொண்டு வந்ததால் அந்த தெய்வம் கோவிந்தன் எனப்பட்டது. கோ என்றால் பூமி. அவிந்தம் என்றால் அதை அடைந்து வெளிக்கொணருதல் என்று பொருள். கோவிந்தா என்றால் இருளாகிய குகையிலிருந்து, நம்மை வெளிக் கொணருபவன் என்று பொருள்.பூமியை வெளியே கொண்டு வந்தவுடன் உலகத்தினருக்கு என்ன செய்ய வேண்டும் என்று தர்மத்தை உபதேசிக்கவே அவர் வ்ரிஷாகபி எனப்படுகிறார். அவர் சொன்ன முதல் மற்றும் முக்கிய தர்மம் பித்ரு காரியம் செய்ய வேண்டும் என்பதே.
புரிஞ்சுதா?  நாளைக்கு பார்ப்போமா?

No comments:

Post a Comment