பித்ரு என்றால் யார் என்று தெரியுமா குழந்தைகளே? பித்ரு என்றால் இறந்து விட்ட - இறைவன் திருவடி அடைந்து விட்ட நம் முன்னோர்கள் தான் பித்ருக்கள் என்று கூறுகிறார்கள்.
"தாத்தா தாத்தா தமிழில் இந்த பித்ரு என்பவர்களை எப்படி அழைக்க வேண்டும்" ஆவலுடன் கேட்டாள் பேத்தி ஹரிணி.
ஹரிணி, அவர்களை "முன்னோர்கள்" என்றும் அழைக்கிறார்கள். திருவள்ளுவர் போன்று விஷய ஞானம் உள்ளவர்கள் "தென்புலத்தார்" என்றும் அழைக்கிறார்கள்.
"தென்புலத்தார் என்றால் நாம் அவர்களை எப்படி சந்தோஷப்படுத்த வேண்டும்" தாத்தா கேட்டாள் இன்னொரு பேத்தி ஐசு.
அவர்கள் கடவுளா - சாமியா? என்று கேட்டாள் ஹரிணி.
"இல்லே ஐசு - நான் படித்து இருக்கிறேன் - மாதா, பிதா, குரு, தெய்வம் என்று. இதிலே பித்ரு என்றோ தென்புலத்தார் என்றோ வரல்லியே" என்றான் அர்ஜுன்.
ஆமாம் இவர்கள் தெய்வ நிலையை அடையவில்லை. பித்ரு லோகம் என்பது தெற்கிலே உள்ளது. பிரம்ம லோகம் என்பது வடக்கிலே உள்ளது. எனவே தான் இவர்களைத் தென்புலத்தார் என்று கூறுகிறோம். நமது முன்னோர்களை தென்புலத்தில் இருந்து வட புலத்திற்கு அழைத்துச் செல்வது மனிதனாகப் பிறந்த நமது கடமை. ஒரு வகையிலே நன்றிக் கடன் என்று கூடச் சொல்லலாம். எனவே தான் வள்ளுவரும், "நன்றி மறப்பது நன்றன்று" என்று சொல்லி இருக்கிறார்.
No comments:
Post a Comment