" தாத்தா எப்போ பார்த்தாலும் தர்பை புல்லை வைத்து இறைக் காரியம் மற்றும் முன்னோர் வழிபாடு செய்ய வேண்டும் என்று சொல்லுகிறார்களே" என்றான் சூரியா. ஆமாம்டா/ உன்னைப்போலத் தான் நானும் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் அதன் முக்கியத்துவத்தை ஏன் ஆசான் ஜெயஸ்ரீ சாரநாதன் அழகாக - ஆணித்தரமாக _ விளக்கி உள்ளார். உங்களுக்குச் சொல்லுகிறேன். கேளுங்கள். அவரும் ஒரு வலைத் தளத்தை உதாரணம் காட்டி உள்ளார். "தாத்தா அந்த தளம் பேர் என்ன தாத்தா" என்றான் ஒம்சாய். அந்த தளத்தின் பெயர் http://www.trsiyengar.com/id65.shtml)
சதாசிவ ராவ் என்று ஒரு மருத்துவரிடம் சாம்பசிவ ஐயங்கார் என்றான்
தர்பைப் புல்லின் முக்கியத்துவத்தைக் கூறிய போது அவர் நம்பாமல் வியந்து அந்த புல்லை ஒளிக் கதிரில் பரிசோதித்தாராம்/ அறுபது சதவீத கதிரை அது அப்புறப்படுதியாதாக அந்த மருத்துவர் பின்னால் வந்து சொன்னாராம். இதனால் தான் வேட்டைத் தூய்மை செய்யும் போது இந்த தர்பைப் புல்லை வைத்து வீடு பூராவும் நீர் தெளிக்கிறாங்க என்று தெரியுது. இதிலே அந்த நுனி ஒடிந்து இருந்தால் பலன் இல்லை என்றும் தெரிகிறது. இதை எல்லாம் பின்னால் விளக்கமாகச் சொல்றேன். இறப்பு தொடர்புடைய சில நிகழ்சிகளில் ஒற்றை தர்பை உபயோகம் செய்யப்படுவதாகவும், சில சுப காரியங்களுக்கு இரண்டு புல் கொண்ட மோதிரம் அணிவிக்கப்படுவதாகவும், தர்ப்பணம் என்னும் முன்னோர் வழிபாட்டின் போது மூன்று புல் கொண்ட மோதிரம் அணிவிக்கப் படுவதாகவும் ஆலய நிகழ்சிகளில் நான்கு புல் கொண்ட மோதிரம் அணிவிக்கப்படுவதாகவும் அந்த கட்டுரையிலே தெரிவிக்கப்பட்டு இருந்தது. "தாத்தா புல்லுக்குள்ளே இவ்வளவு விஷயமா?" என்று வியந்தான் சாய் அர்ஜுன்.
No comments:
Post a Comment