"தாத்தா ஒரு சின்ன கேள்வி கேட்டதுக்கு இவ்வளவு பெரிய பதிலை இவ்வளவு கோபமாகச் சொல்றீங்களே " என்றான் பேரன் சூரியா. ஆமாண்டா நாகரிகத்திலே சிறந்த நாம் மற்றவர்களிடம் கருத்துக் கடன் வாங்கினோம் என்றால் அது சரியில்லை. அதனால் தான் இப்படி புரியற மாதிரி விளக்கமா சொல்ல வேண்டி வந்தது.
"சரிங்க தாத்தா நேற்று நாள்காட்டியிலே மஹாலய பட்சம் ஆரம்பம் என்று போட்டு இருந்ததே. ஏன் தாத்தா? அப்படின்னா என்ன தாத்தா? " என்றான் பேரன் அர்ஜுன். நல்ல கேள்வி. நாம் தினசரி வீட்டில் கடவுளைக் கும்பிடுகிறோம். அலுவலகம் சென்றால் அங்கேயும் கும்பிடுகிறோம். கோவிலுக்கோ - மாதா கோவிலுக்கோ - பள்ளிவாசலுக்கோ சென்று இறைவனை வணங்குகிறோம். ஆனால் தெருவில் தேரில் அல்லது பல்லக்கில் இறைவன் நம்மைக் காண வந்தால் என்ன செய்கிறோம். வாசலில் தேங்காய்-பழம் வைத்து இறைவன் வரும் போது சூடம் ஏற்றி தொழுவதில்லையா. அந்த மாதிரி முன்னோர்கள் புரட்டாசி பௌர்ணமி முதல் மகாளய அமாவாசை முடிய நமது இல்லத்து வாசலில் வந்து நமக்கு ஆசி வழங்கக் காத்திருக்கிறார்கள். நாம் முறையாகப் பூசை செய்ய வேண்டும். தினசரி நாம் உணவு உண்ணும் முன் - நம் முன்னோர்களை - தந்தை வழி மற்றும் தாய்வழி முன்னோர்களை நினைத்து - அவர்களுக்கு மூன்று கவளம் ஒரு இலையில் எடுத்து வைத்து - சிறுது நீரை ஒரு ஏனத்தில் வைத்து படைக்க வேண்டும். அவர்களை மனதார நினைத்து அதை ஏற்றுக் கொள்ளும் படி கூற வேண்டும். பின் உணவை உண்ண வேண்டும்.
"சரிங்க தாத்தா. இனிமே முன்னோரை நினைத்து பின்னரே சாப்பிடுவேன். சரியா." என்றான் பேரன் ஒம்சாய். நன்று நன்று என்றேன் நான். "தாத்தா இந்தா முன்னோர் வழிபாட்டை நமது மொழியில் புரிந்து கொண்டு செய்வது எப்படி. ஐயர் வந்தால் நமக்கு புரியாத மொழியில் இதோ சொல்கிறார். புரிந்து செய்தால் நன்றாக இருக்கும்" என்றான் சூரியா. சொல்கிறேன் கேளுங்கள்.
No comments:
Post a Comment