Thursday, September 23, 2010

MUNNOR VAZHIPAADU - PITRU POOJA - NANRIKKADAN

"என்ன பித்ரு பூஜை என்பது நன்றிக்கடனா?" என்றான் சூரியா.  ஆமாம்டா.  நன்றிக்கடன்.  நாம் கருவில் இருக்கும் போது நாம் தாயின் குருதியில் இருந்து நீர் என்னும் உயிர்ப்போருளை வாங்கி இருக்கிறோம்.  மூச்சு விட உயிர்க்காற்று வாங்கி இருக்கிறோம்.  போதிய அனல் அதாவது தீ இருந்ததால் உயிர் பிழைத்து இருக்கிறோம்.  பூமியில் இருந்து விளையும் பொருளைத் தாய் சாப்பிட்டதால் தான் நாம் உயிர் சத்து பெற்று வளர்ந்து இருக்கிறோம்.  இப்படி இயற்கை நமக்கு கருவில் இருக்கும் போதே பல உதவிகளைச் செய்து இருக்கிறது.  அதைப் பெறுவதற்கு பெற்றோர் உதவி புரிந்தனர்.  அதனால் தான் நாம் பிறந்தோம்.  எனவே நம் முன்னோர்களுக்கும் இயற்கைக்கும் கடன் பட்டு இருக்கிறோம்.  கடன் வாங்கினால் அடைக்க வேண்டும் அல்லவா.  நாம் கடன் வைத்து இறந்தால் நமது சந்ததி அதைச் சுமக்க வேண்டி வரும்.  சுமக்க முடியாத கடன் சேர்ந்தால் அந்த குளத்தில் இன்னல்கள் - துயரங்கள் அதிகம் வரும்.  எனவே கடனைத் திருப்பி செலுத்த வேண்டும்.  அமாவாசை அன்று - ஆடி அமாவாசை அன்று - மகாளய அமாவாசை அன்று இப்படி சில குறிப்பிட்ட நாட்களில் அவர்கள் நம்மிடம் வருவார்கள். நாமும் கடனைச் செலுத்த வேண்டும்.  பெரிய விடயம் அல்ல.  எள்ளும் நீரும் இறைக்க வேண்டும்.  மரியாதையை கட்ட வேண்டும்.  வணங்க வேண்டும்.  நல்லது செய்யுங்கள் என்று வேண்ட வேண்டும்.  "ஏன் தாத்தா - இப்படி செய்ததாக நமது முன்னோர்கள் பாட்டுகளில் எழுதி வைத்து இருக்கிறார்களா?" என்றான் சூரியா.  ஆமாம் நான் கூட புறநானூறு படிக்கும் போது படித்து இருக்கிறேன்.

"அறப்போர் புரிந்த அந்நாட்களில், பசு, பெண்டிர் ஆகிய பலரைக் கொல்லக் கூடாது. இந்த வரிசையில், இறந்தோருக்குச் செய்ய வேண்டிய பிண்டோதககிரியை செய்ய பிள்ளை பெறாதவர்களையும் கொல்லக் கூடாது.என்று பழைய தமிழகத்தில் - பக்ஹ்ற்றுளி  ஆறு ஓடிய தமிழ்க் தேசத்தை ஆண்ட பாண்டியன்
பல் யாக சாலை முது குடுமிப் பெரு வழுதி அவ்வாறு இருந்தான் என்று புறநானூறு 9 கூறுகிறது.
தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இருக்கும்
பொன் போல் புதல்வர் பெறாதீரும் ..”
புறநானுறு 234 -இல் வேள் எவ்விக்கு, அவன் மனைவி பிண்டம் வைத்ததாக குறிப்பு வருகிறது.
தன்மனார் காதலி புன்மேல் வைத்த இச்சிறு பிண்டம்என்று மனைவியைக் காதலி என்று சொல்லி, அவள் பிண்டம் வைத்ததாக வந்துள்ளது."  இத நான் சொல்லல்லே.  ஜெயஸ்ரீ சாரநாதன் என்று ஒரு அறிஞர் சொல்லுகிறார்.  அவர் பல விடயங்களைப் படித்தவர்.  அவருக்கு வான சாத்திரம் தெரியும். சாதகம் தெரியும்.  தமிழ் இலக்கியம் தெரியும்.  வடமொழி இலக்கியம் தெரியும்.  இப்படி கொள்ளை விடயம் அவருக்குத் தெரியும்டா.  அவரு தமிழ் ஹிந்து என்கிற வலைத் தளத்தில் எதை எல்லாம் நல்ல தமிழில் - எல்லோருக்கும் புரியிர மாதிரி சொல்றார்டா.  நான் போன வாரம் படித்தேன்.  உங்களுக்கு சொன்னா நீங்களாவது புரிஞ்சிகிட்டு இந்த தாத்தாவுக்கு மரியாதையை செய்வீங்களே என்று உங்களிடம் சொல்லுகிறேன் என்றார் தாத்தா. "ஏன் தாத்தா மத்த மதங்களிலே இப்படி முன்னோர்களைக் கொண்டாடுகிறார்களா?" என்றான் அர்ஜுன்.   டேய்.  நாம் தான் முன்னோர்களுக்கு மரியாதையை தருவது இல்லை.  அமெரிக்காவில் எல்லாம் கல்லறை எப்படி இருக்கு தெரியுமா.  ரொம்பத் தூய்மையாக இருக்குடா.  அவங்களும் கல்லறை நாள் என்று ஒன்று கொண்டாடுகிறார்கள்.  அன்றைக்கு பல கிறித்துவ நாடுகளில் விடுமுறை கூட விடுகிறார்கள்.  நான் இதை வலைத் தளத்தில் படித்து இருக்கிறேன்.  "தாத்தா.  காட்டுங்க அந்த வலைத் தளச் செய்தியை" என்றான் அர்ஜுன்.  காட்டினேன் அவனுக்கு.  நீங்களும் படியுங்கள்.  தெரிந்த உறவினர்கள் - நண்பர்கள் என்று மறைத்த மாமனிதர்களுக்கு மரியாதையை செலுத்தும் தினம் என்று கொண்டாடப் படுகிறது.  கல்லறைத் தூய்மை செய்து அவர்களுக்கு வேண்டிய - பிடித்த பண்டங்களை வைத்து திருநாளாகக் கொண்டாடுகிறார்கள்.  நமது ஊரிலும் கொண்டாடுகிறோம்.
Day of the Dead (Spanish: Día de los Muertos), is a holiday celebrated in Latin America and by Latin Americans living in the United States and Canada. The holiday focuses on gatherings of family and friends to pray for and remember friends and family members who have died. The celebration occurs on November 2 in connection with the Catholic holidays of All Saints' Day (November 1) and All Souls' Day (November 2). Traditions connected with the holiday include building private altars honoring the deceased using sugar skulls, marigolds, and the favorite foods and beverages of the departed, and visiting graves with these as gifts. Due to occurring shortly after Halloween, the Day of the Dead is sometimes thought to be a similar holiday, although the two actually have little in common. The Day of the Dead is a time of celebration, where partying is common.
தாத்தா- தாத்தா இந்த திருநாளை முதலில் கொண்டாடியவர் யார் தாத்தா? என்றான் சூரியா.  நாளைக்குச் சொல்கிறேன் என்றேன் நான்.  உங்களுக்கும் தான்.

No comments:

Post a Comment